ப்ளாக்பஸ்டர் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில்,இளம் நாயகன் விஜய் தேவரகொண்டாவுடைய முதல் பன்மொழி திரைப்படமாக உருவாகும் ‘லைகர் ‘ எதிர்பார்ப்பிற்குரிய திரைப்படமாக உருவாகிவருகிறது.
பூரி கனெக்ட்ஸ் நிறுவனம் இந்த பொழுதுபோக்கு ஆக்சன் திரைப்படத்தினை பாலிவுட்டின் முன்னணி நிறுவனமான தர்மா ப்ரொடக்சனுடன் இணைந்து தயாரிக்கிறது.
படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு பணிகள் துவக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே படக்குழுவினர் படத்தின் திரையரங்கு வெளியீட்டு தேதியை அறிவித்தனர் என்பது குறிப்பிடதக்கது.செப்டம்பர்9-ல்ரிலீஸ்.
அறிவிப்பு போஸ்டரில் விஜய் தேவரகொண்டா கையில் ஒரு தடியுடன், மிக வித்தியாசமான தோற்றத்தில் அழுத்தமான பார்வையுடன் காட்சி தருகிறார்.
தனது நாயகர்களை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் காட்டும் திறமை கொண்ட இயக்குநர் பூரி ஜெகன்நாத் இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவை மிகவும் வித்தியாசமான, இதுவரை கண்டிராத தோற்றத்தில் காட்டியுள்ளார்.
பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே இப்படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடிக்கிறார்.
நடிகை ரம்யா கிருஷ்ணன் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாகிறது.