காதலர் தினம் என்றாலே டேட்டிங் என்ற பெயரில் ஊர் சுற்றுவது என இன்றைய தலைமுறை ஒரு மோசமான ஃபார்முலாவை உருவாக்கி வைத்திருக்கிறது. அதனாலேயே காதலர் தினத்தை வெறுப்பவர்கள் அதிகரித்து வருகிறார்கள்.
நடிகை சாக்ஷி அகர்வாலும் காதலர் தினத்தை கொண்டாடியுள்ளனர்.
ஆம், காதலர் தினத்தையொட்டி ஆதரவற்ற குழந்தைகளோடு நேரத்தைச் செலவிடுவது, அவர்களுக்கு உணவு வழங்கி மகிழ்வது என்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் சாக்ஷி.
தான் நடித்த ‘குட்டி ஸ்டோரி’ படம் ரிலீஸான உற்சாகத்திலிருக்கும் நேரமாகப் பார்த்து காதலர் தினம் வருகிறது. அதே உற்சாகத்தோடு, சென்னை பெரும்பாக்கத்தில் அமைந்துள்ள ‘நியூ ஹோப் அண்ட் நியூ லைஃப்’ என்ற ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்துக்குச் சென்று அங்குள்ளவர்களுக்கு உணவு வழங்கி, கலந்து பழகி, அவர்களோடு விளையாடி மகிழ்வித்து திரும்பியிருக்கிறார். அதுதான் தன்னுடைய காதலர் தினக் கொண்டாட்டம் என்கிறார்.
இது குறித்து ஸாக்ஷி அகர்வால் கூறியதாவது,’காதலர்தினத்தை உலகம் பார்க்கிற பார்வை வேற. நான் அதை மனுஷங்க மேல மனுஷங்க அன்பு செலுத்துறதுக்கான தினமாத்தான் பார்க்கிறேன். யார் வேணாலும் யார் மேல வேணாலும் அன்பு செலுத்தலாம். எனக்கு ஆதரவற்ற குழந்தைகள் மேல அன்பு செலுத்துறது பிடிச்சிருக்கு. அவங்கதான் என்னோட காதலர்கள். அதனால, காதலர் தினத்தை அவங்களோட கொண்டாடுறேன்.
மூணு வருஷத்துக்கு முன்னே, ‘ஃபுட் ஃபார் டூ’ங்கிற (Food for Two) கான்செப்ட்ல காதலர் தினத்தைக் கொண்டாடினேன். அதாவது ‘ஒரு மனுஷன் இரண்டு பேருக்கு உணவு கொடுத்தாலே போதும்; நாட்டுல ஏழைகளுக்கு பசி பட்டினி இருக்காது’ங்கிற விழிப்புணர்வை உருவாக்குறதுக்காக பண்ணது அது.
போன வருஷ காதலர் தினத்தை, ‘எய்ட்ஸ்’ பாதித்த பெற்றோருக்கு பிறந்த பிள்ளைகளுக்கான ஒரு காப்பகத்துல அவர்களைத் தொட்டுப் பேசி பழகி, சாப்பாடு கொடுத்து கொண்டாடினேன். ‘எய்ட்ஸ் பாதித்தவங்களை தொடுறதால நமக்கு எய்ட்ஸ் தொற்றாது; அவங்களை தொட்டுப் பழக தகுதியற்றவர்களா நினைக்கிறது தப்பு’ங்கிறதை எடுத்துச் சொல்றதுக்கான முயற்சியா அதை பண்ணேன்.
இந்த வருஷம், கிட்டத்தட்ட 100 ஆதரவற்ற குழந்தைகள் இருக்கிற ‘நியூ ஹோப் அண்ட் நியூ லைஃப்’ காப்பகத்துல காதலர் தினத்தைக் கொண்டாடினேன். மனசுக்கு அவ்ளோ ஹேப்பி… இது அடுத்தடுத்த வருஷமும் தொடரும்” என்கிறார்.
‘