“கைதி” படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு தன்னையே புதுப்பித்துகொண்டு அசத்தலாக தோற்றமளிக்கிறார் “சுல்தான்” கார்த்தி. சமீபத்தில் வெளியான சுல்தான் படத்தின் பரபர ட்ரெய்லர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது. புது லுக்கில் கார்த்தி, ஆந்திராவை கலக்கும் இளம் நெஞ்சங்களின் நாயகி ராஷ்மிகா மந்தனா கூட்டணியில் கலர்ஃபுல் கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ளது இப்படம். Dream Warrior Pictures சார்பில் SR பிரகாஷ் பாபு, SR பிரபு தயாரித்திருக்கும் இப்படத்தினை ‘ரெமோ’ இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார்.
படம் குறித்து பாக்கியராஜ் கண்ணன் கூறியதாவது..,”மகாபாரதத்துல கிருஷ்ணர் கௌரவர்கள் பக்கம் நின்னா எப்படி இருக்கும், அந்த புள்ளி தான் இந்த படம். முழுக்கதையும் இப்பவே சொல்லிட முடியாது. படத்தில் பாருங்க, உங்களுக்கு அந்த சர்ப்ரைஸ் இருந்துட்டே இருக்கும். நீரின்றி அமையாது உலகுனு சொல்லுவாங்க அதே போல் தான் உறவின்றி அமையாது உலகு. உறவுகளுக்காக முன்ன வந்து நிற்கும் ஒருவனின் கதை தான் இந்தப்படம்.
பரபரப்பான திரைக்கதையில் காதல், காமெடி எல்லாம் சரிவிகிதத்தில் கலந்த கமர்ஷியல் படமா இருக்கும். கைதியோட வெற்றிக்கு பிறகு கார்த்தி சார் கிட்ட நிறைய பொறுப்பு வந்திருக்கு. விமர்சனங்கள் அனைத்தையும் திறந்த மனதோடு ஏற்றுக்கொள்கிறார். தன்னை அதுக்கேற்றவாறு வடிவமைத்திருக்கிறார்.. இந்தப்படம் அவரோட நடிப்பை இன்னும் மெருகேத்தி காட்டும். அவருக்கு படம் ரொம்ப பிடிச்சிருந்தது. இப்படத்தில் கார்த்தி, ராஷ்மிகா ஜோடி கலர்ஃபுல்லா இருப்பாங்க. கார்த்தி, யோகிபாபு காமெடி கூட்டணிஅதகளப்படுத்யியிருக்காங் க. கேஜிஎஃப் வில்லன் ராம்சந்திர ராஜு மிரட்டியிருக்கார். விவேக் மெர்வின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்.
ஒரு பெரும் கூட்டத்தை வைத்து, மிகப்பெரிய பட்ஜெட்டில் படம் பண்ணியிருக்கோம். தன்னை நம்பி வந்த உறவுகள எப்படி பாத்துக்கறதுங்கறத சுல்தான் சொல்லுவான். இது குடும்பத்துடன் ஜாலியா பார்க்ககூடிய படமா, அனைவருக்கும் பிடிக்கும் படமா இருக்கும். படம் அழகா வந்தததில் எங்களுக்கு முழு திருப்தி. ரசிகர்களின் பாராட்டுதலுக்காக தான் காத்திருக்கிறோம்” என்கிறார். இப் படத்தின் அனைத்து கட்ட வேலைகளும் முடிந்த நிலையில், ஏப்ரல் 2 ஆம் தேதி உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது “சுல்தான்” திரைப்படம்.