உள்ளூரில் ஆயிரத்தெட்டு பிரச்னைகள் இருக்கும்.ஆனா உலக அளவில்தான் நம்ம ஆளுங்க சிந்தனை பண்ணுவாங்க. அவன் வீட்டு சிக்கலை தீர்க்க வழி பார்க்க மாட்டான்.
சினிமாக்காரர்களின் வீடுகளில் என்ன நடக்கிது ,மாஸ்டர் படத்தில தளபதி விஜய்க்கு எவ்வளவு சம்பளம் ,சொந்தக்காரரின் தயாரிப்பு என்பதினால் குறைச்சு வாங்கி இருப்பாரா? மக்கள் செல்வன் விஜயசேதுபதி எப்படி வில்லனா நடிக்க சம்மதிக்கலாம் ,அவருடைய இமேஜ் டாமேஜ் ஆகிருச்சே ..இப்படி அநாவசியமான கேள்விகள் அவனுடைய மண்டைக்குள் கிர்ர்ர் அடிக்கும்.
இப்படிப்பட்ட ஒரு நண்பர் வந்தார்.
“ஏன் ப்ரோ, மாஸ்டர் படத்தில விஜய் சேதுபதிக்குப் பதிலா வேற யார் யாரையோ அப்ரோச் பண்ணுனாங்களாமே ,தெரியுமா?” என்று கேட்டார்.
எனக்கு தெரிந்த பதிலை சொன்னேன்.
“மாதவனை கேட்டாங்களாம். பிறகு நானிகிட்டேயும் பேசுனாங்களாம் .ஆடை பட டைரக்டர் ரத்னகுமார்தான் விஜய் சேதுபதிகிட்ட பேசி சம்மதம் வாங்கினார்ன்னு சொல்றாங்க. தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் விஜய்சேதுபதிக்கு இருக்கு .அதனால அவர் வில்லனா நடிப்பாராங்கிற சந்தேகம் அவங்களுக்கு இருந்திருக்கு”
“தளபதியின் சம்பளம் 80 கோடின்னு சொல்றாங்களே…தளபதியின் நெருங்கிய சொந்தக்காரர்தானே ப்ரொட்யூசர் சேவியர் பிரிட்டோ .அவரிட்ட கூடவா 80 கோடி வாங்கியிருப்பாரு?”
படம் ஓடி முடிஞ்சி ஓடிடிக்கு வந்தபிறகும் நம்ம ஆளுங்களுக்கு எதிலெல்லாம் டவுட் வருது பாருங்க. தயாரிப்பாளர் பிரிட்டோ சொன்னதை அப்படியே சொன்னோம்.
“தளபதி விஜய் ஒரு குறிப்பிட்ட தொகையை சொன்னார் .சொன்ன தொகையை கொடுத்திட்டோம்.அதன் பிறகு அவரிடம் எந்த ‘நெகோஷியேஷனுக்கும் ‘போகல. என்னுடைய உறவு ஆரம்பத்திலிருந்தே தொழில் ரீதியாகவே இருந்தது. நாங்க ரெண்டு பேரும் அதில கரெக்ட்டா இருந்தோம்.
இன்னிக்கி தமிழ்ச்சினிமா உலகத்தில லாபகரமான நடிகர்களில் அவரும் ஒருவர். வெள்ளி, தங்கம் ,வைரத்துக்கு வித்தியாசமான விலை இருக்கு.மதிப்பு மாறுபடும். ஆனா வைரத்துக்கு நீங்க அதிக விலை கொடுத்துத்தான் ஆகணும்.அது மாதிரிதான் தளபதியும். நிறைய ஹிட்ஸ் கொடுத்திருக்கிறார். மிகப்பெரிய ரசிகர் வட்டம் இருக்கு.1992-ல் இருந்து கடுமையாக பாடுபட்டுதான் இன்னிக்கி இந்த அளவுக்கு வந்திருக்கிறார் .அவர் எவ்வளவு கேட்டாலும் கொடுக்கலாம். ” என்கிறார் என்பதை கேள்வி கேட்ட நண்பருக்கு சொன்னோம்.