நடிகைகளுக்கு கோவில்கட்டிசூடம்,சாம்பிராணி காட்டுவதில் தமிழ் ரசிகர்களுக்கு இணையே கிடையாது.
முன்பு குஷ்புவுக்கு கோவில் கட்டினார்கள். தற்போது நிதி அகர்வாலுக்கு சிலை அமைத்து குட்டியா ஒரு கோவிலை கட்டியிருக்கிறார்கள். எப்படியெல்லாம் ஆன்மீகத்தை வளர்க்கிறார்கள் . புல்லரிக்கிது !
யாரிந்த நிதிஅகர்வால்?
ஜெயம்ரவியுடன் பூமி, சிலம்பரசனுடன் ஈஸ்வரன் படங்களில் நடித்து தமிழுக்கு அறிமுகமானவர் நிதி அகர்வால்.
தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படி இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில் தமிழில் நிதி அகர்வாலுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகி விட்டனர் .
இப்போது சென்னையில் உள்ள காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரசிகர்கள் கோவில் கட்டி உள்ளனர்.
காதலர் தினமான நேற்று அவரது சிலைக்கு பால் அபிஷேகம் செய்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டுள்ளனர். அடடே ,இதுவன்றோ பக்தி!
.இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்த நிலையில்,இது குறித்து தகவல் அறிந்த நடிகை நிதி அகர்வால், இதை ரசிகர்கள் தனக்கு கொடுத்த காதலர் தின பரிசாக நினைப்பதாகவும், தமிழக ரசிகர்களின் அன்பு மழையில் ஆனந்தமாக நனைந்து கொண்டிருப்பதாகவும் அவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.