தமிழ் சினிமாவிற்கு மேலும் திகிலூட்டக்கூடிய வகையில் வெளிவர இருக்கும் திரைப்படம் ‘களம்’. இந்த படத்தின் முன்னோட்டத்தை இன்று இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டார். ” தற்போது தான் இந்த படத்தின் முன்னோட்டத்தை நான் பார்த்தேன். ஓர் திகில் சினிமாவிற்குரிய அனைத்து அம்சங்களும் இதில் அமைந்திருக்கிறது”, என்கிறார் வெங்கட் பிரபு. மேலும் அவர் கூறுகையில், “பொதுவாக ஓர் திகில் படம் எடுப்பது சாதாரண விஷயம் அல்ல; பார்வையாளர்களை பயத்தில் வைத்திருப்பதே அதனுடைய சிறப்பம்சம். அந்த வகையில், களம் படத்தின் முன்னோட்டம் என்னை சில இடத்தில் ஆட்டம் காட்டிவிட்டது. அறிமுக இயக்குனர் ராபர்ட் S ராஜ் மற்றும் கதை ஆசிரியர் சுபிஷ் K சந்திரன் அவர்களுக்கும், படம் வெற்றிப்பெற நான் வாழ்துகிறேன்”, என்றார்.
ஏப்ரல் மாத நாட்களில்,இந்த திகில் அனுபவத்தை நாம் எதிர்ப்பார்க்கலாம்.