ஆந்திராவில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ்.
இவர்கள் தளபதி விஜய் நடிக்கும் நேரடி தெலுங்குப் படத்தில் நடிப்பதற்கு அட்வான்ஸ் 10 கோடி கொடுத்திருப்பதாக ஒரு தகவல் கிடைத்திருக்கிறது.
மாஸ்டர் தெலுங்கு டப்பிங் படம் கனமான லாபத்தை தந்திருப்பதால் அவருக்கேற்ற கதையை ஆந்திர கதாசிரியர்கள் தயார் பண்ணியிருக்கிறார்கள். இந்த கதைகளில் எதையாவது ஒன்றை விஜய் தேர்வு செய்வார் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
இது மட்டுமல்ல ,தமிழ்- தெலுங்கு இரு மொழிப்படத்தின் வழியாக விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்யின் அறிமுகம் நடக்கப்போவதாக ஆந்திராவில் கிசு கிசுக்கிறார்கள். தற்போது ஆந்திராவில் வாரிசு நடிகர்களுக்கு பெருவாரியான ஆதரவு கிடைத்து வருகிறது.