
கழுகு கிருஷ்ணா என்றால் கிளு கிளு நாயகிகளுக்கு கட்டாயம் இடம் இருக்கும். அப்படி செலக்ட் பண்ணிதான் ஆட்களை செலக்ட் பண்ணுவார். அண்மைக்காலமாக அவ்வளவாக ஆஜர் ஆகாமல் ஆப்சென்ட் லிஸ்ட்டில் இருந்தார்.
தற்போது சின்னசாமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ராயர் பரம்பரை என்கிற படத்தில் நடிப்பதாக ஒரு செய்தி வந்திருக்கிறது.
முதலில் டெக்னீஷியன்ஸ் லிஸ்ட் பார்க்கலாம்.
டைரக்டர்: டி .ராம்நாத் ,ஒளிப்பதிவாளர் : விக்னேஷ் வாசு இசையமைப்பாளர் : கணேஷ் ராகவேந்திரா ,எடிட்டர்: சசிகுமார்,கலை இயக்குனர் : குமார் ,மேக்கப் மேன் :ஆர்.கே.
காஸ்டியூமர் : ரங்கசாமி ,டான்ஸ் மாஸ்டர்: சாண்டி , ஸ்ரீ சங்கர் ,ஸ்டண்ட் மாஸ்டர்: சூப்பர் சுப்பராயன் ,ஸ்டில்ஸ்: திலீப் , தயாரிப்பாளர் : சின்னசாமி மெளனகுரு.
இனி மேட்டருக்குள் போகலாம்.
கழுகு கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்க, மலையாளத்தில் மிகப்பெரிய ஹிட்டான மரடோனா, டூ ஸ்டேட்ஸ் படங்களின் கதாநாயகி சரண்யா நாயர் தமிழுக்கு கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும், தெலுங்கு பட நாயகி மும்பை அனுசுலா மற்றும் மும்பை மாடல் கிருத்திகா என்ற இரு புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள். மேலும்,கே.ஆர் . விஜயா, ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா ஆர்.என்.ஆர் மனோகர், கஸ்தூரி, மற்றும் பலர் நடிக்க செண்டிமென்ட் கலந்த மிகப்பெரிய காமெடி படமாக பொள்ளாச்சியில் தயாராகி உள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்திலும் சூட்டிங் ஒரே செடியூலில் பிளான் செய்யப்பட்டு டிசம்பர் தொடங்கி பொங்கலுக்கு முன் முடிக்கப்பட்டது.
இனி திரைக்கு வரவேண்டியதுதான் பாக்கி.