
இது இ பிஎஸ்.ஓபிஎஸ் வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். பெங்களூருவிலிருந்து சுமார் 23 மணி நேர பயணத்திற்கு பிறகு இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவின் இல்லத்திற்கு சசிகலா வந்து சேர்ந்து தற்போது ஓய்வெடுத்து வருகிறார் சசிகலா,
இந்நிலையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 11-ன்படி சசிகலா ஓராண்டுக்கு பிறகு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு ஏற்படும் என்றும், வருகிற சட்டமன்றத் தேர்தலில் சசிகலா தீவிரமாக களமிறங்குவார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள்.
இப்போது, அவரது கட்சியினரின் ஒரே கேள்வி “சசிகலா முதல்வராக முடியுமா..?” என்பதுதான்.
சசிகலா சிறை செல்வதற்கு முன்பாகவே முதல்வராகுவதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வந்தவர். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு வருடங்கள் சிறை தண்டனை கிடைத்ததால் அந்த கனவு கலைந்தது. சசிகலா தற்போது விடுதலையாகி விட்டாலும் கூட, ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது.
.ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றுள்ளதால், இந்த 6 ஆண்டு தடை சசிகலாவுக்கு முட்டுக்கட்டையாக மாறி உள்ளது.
ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் தண்டனை பெற்றுள்ளதால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951ன் 8வது பிரிவின் கீழ் இப்படியான ஒரு முட்டுக் கட்டை அவர் முன்பு வந்து நிற்கிறது. இந்த சட்டப்பிரிவின்கீழ், சில குறிப்பிட்ட குற்றங்களுக்காக சிறைக்கு போனவர்கள், சிறையிலிருந்து விடுதலையான தேதியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.2021ம் ஆண்டு ஜனவரி மாதம் சசிகலா சிறையில் இருந்து ரிலீஸ் செய்யப்பட்டுள்ளார். எனவே, இந்த சட்டசபை தேர்தலிலும், 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் சசிகலாவால் போட்டியிட முடியாது என்பது பொதுவான ஒரு கருத்து.
“எனவேதான், தமிழக அரசியலில் சசிகலா குயினாக இருக்க முடியாது.. கிங் மேக்கராக இருக்கலாம்” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
அதாவது அவர் யாரை கை காட்டுகிறாரோ அவரை அதிமுக முதல்வராக்க வாய்ப்பு இருக்கிறது.. அல்லது, அதிமுக சசிகலாவை ஏற்காவிட்டால்.. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மூலமாக வேறு ஒருவரை முதல்வராக்க வாய்ப்பிருக்கிறது.. இப்படியெல்லாம் வாய்ப்புகள் இருந்த போதிலும் சசிகலா முதல்வராகும் வாய்ப்பு அமையாது.. அதற்கு சட்டம் இடம் கொடுக்காது.. என்பது இவர்கள் வாதம்
தேர்தலில் போட்டியிட முடியாவிட்டாலும், ஒரு கட்சியை வழிநடத்தலாம் அல்லது தலைவராக இருக்கலாம். அதற்கு யாரும் தடை விதிக்க முடியாது என்பது சசிகலா ஆதரவாளர்களுக்கு ஆதரவு அளிக்கும் விஷயமாக உள்ளது.
அதேநேரத்தில் சசிகலா விஷயத்தில் சிக்கிம் மாநிலத்தில் நடந்த அரசியல் நிகழ்வைஅவரது ஆதரவாளர்கள் முன் உதாரணமாக காட்டுகிறார்கள்.
சிக்கிம் மாநிலத்தில் கால்நடைத்துறை அமைச்சராக இருந்த பிரேம்சிங் தமாங் ஊழல் வழக்கில் சிறையில் இருந்தார். 2018-ம் ஆண்டு ஓராண்டு சிறை தண்டனை முடிந்து வெளியில் வந்த அவரும் 6 ஆண்டுகள் போட்டியிட முடியாது என்று சட்ட நிபுணர்கள் கூறி இருந்தனர்.
ஆனால் அடுத்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அவர் போட்டியிட்டு முதல்- அமைச்சர் ஆனார்
6 ஆண்டு தடையை நீக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் பிரேம்சிங் தமாங் முறையிட்டு இருந்தார்.
இதன்படி தேர்தல் ஆணையம் அதனை பரிசீலித்து அவருக்கு சலுகை வழங்கியது.மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 11-ன்படி இந்த தளர்வு அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.இதே சட்டப் பிரிவை பயன்படுத்தி தனக்கும் விதிமுறை தளர்வு அளிக்க வேண்டும் என்று சசிகலா தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்க வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்
இதுபோன்ற சலுகையை சசிகலாவுக்கும் பெற்று விட வேண்டும் என்பதில் தற்போது அ.ம.மு.க.வினர் தீவிரமாக உள்ளனர்.பிரேம்சிங் தமாங்போன்று, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தல் ஆணையம் 6 ஆண்டு தடையை ஓராண்டு ஒருமாதமாக குறைத்து சலுகை வழங்கவும் இடம் இருப்பதாக கூறுகிறார்கள்.
இந்த சலுகையை பெற்று விட்டால் சசிகலா ஓராண்டுக்கு பிறகு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு ஏற்படும் என்று அ.ம.மு.க. வினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.ஒருவேளை தமாங்கிற்கு வழங்கிய அதே முன்னுதாரணப்படி, தேர்தல் ஆணையம் சார்பில் சசிகலாவுக்கு சலுகை வழங்கினாலும் இன்னும் ஓராண்டு மற்றும் ஒரு மாத காலத்திற்கு சசிகலா போட்டியிட முடியாது.
அடுத்த தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கக் கூடும். ஒருவேளை ஓராண்டு ஒரு மாதம் கழித்து தனது கட்சியைச் சேர்ந்த ஒரு எம்எல்ஏவை ராஜினாமா செய்ய வைத்து அந்த தொகுதியில் நடக்கும் இடைத் தேர்தலில் போட்டியிட முடியும்.
இதையடுத்து தேர்தல் ஆணையத்தில் முறையிட அக்கட்சியினர் முடிவு செய்துள்ளனர். தேர்தல் ஆணையத்தின் முடிவு ஒரு வேளை சசிகலாவுக்கு சாதகமாக அமைந்தால், தற்போது கிடைத்துள்ள தகவல்களின் படி முதல்வர் எடப்பாடி போட்டியிடும் தொகுதியில் சசிகலாவை களமிறக்க அவரது கட்சி நிர்வாகிகள் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சசிகலா தேர்தலில் போட்டியில்லை என முடிவெடுத்தால் அதிமுகவில் மீண்டும் போட்டியிட சீட் கிடைக்காத மாஜிக்களை மற்றும் அதிருப்தி கட்சி நிர்வாகிகளை அமமுக சார்பில் தேர்தலில் போட்டியிட களமிறக்கவும் சசிகலா மாஸ்டர் பிளான் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுவும் டெல்லி மேலிடத்தின் காதுகளை சென்றடைய, ‘எதுவாயிருந்தாலும் தேர்தலுக்கு பிறகு பேசி தீர்த்துக்கலாம் தேர்தலில் குழப்பம் வேண்டாம்.ரத்தத்துடன் ரததங்கள் மோதினால், திமுக எளிதில் ஆட்சியை பிடித்துவிடும்.எனவே தேர்தல் முடியும் வரை அமைதி காக்கும்படி ஏற்கனவே சசிகலா தரப்புக்கு அறிவுறுத்திய நிலையில், அவர்களும் சசிகலாவின் அடுத்த ‘மூவ்’க்காக காத்திருக்கிறார்களாம்.