மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வில்லன், மிஸ்டர் பிராடு உள்ளிட்ட நான்கு படங்களை இயக்கிய, பி.உன்னிகிருஷ்ணன் என்பவர் மீண்டும் மோகன்லால் நடிப்பில் `ஆராட்டு’. என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில், நெய்யாற்றின்கரை கோபன் என்கிற கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்க, ஷ்ரத்தா ஸ்ரீநாத் இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தில்தான் மோகன்லால் உடன் இணைந்து ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்து சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாக மலையாள சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.