90 களில் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் கலக்கிய சூப்பர் ஹிட் பாடல் கமல்ஹாசன் நடிப்பில் இளையராஜாவின் இசையில் வெளியான, ‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும்….. என தொடங்கும் பாடல்.
இன்றைக்கும் இளையதலைமுறை முணுமுணுக்கும் பாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்பாடலை யுவன்சங்கர் ராஜா தன இசையமைத்து வரும் நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் ‘டிக்கிலோனா’படத்துக்காக ‘ரீ’மிக்ஸ் செய்துள்ளார்.
இந்தப் பாடலை நடிகர் சந்தானம் தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று மாலை வெளியிட்டுள்ளார் . இப்பாடல் குறித்து நடிகர் சந்தானம் பதிவிட்டுள்ளதாவது, ராஜா ராஜாதான்.. ராஜா சார் ஒரிஜினல் இசையில் உருவான, யுவனால் ரீமிக்ஸ் செய்யப்பட்ட ‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும்’ பாடலுக்கு நான் நடனம் ஆடியுள்ளதை நம்ப முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.