செம திமிரு ..கன்னட படத்தை தமிழில் டப்பிங் செய்திருக்கிறார்கள்.
ஆக்சன் கிங் அர்ஜுனின் தங்கை மகன்தான் துருவா ஷார்ஜா. இவருடைய அண்ணன் சிரஞ்சீவி சார்ஜா .தற்போது உயிருடன் இல்லை.அவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு படத்தை தொடங்குகிறார்கள்.
.சிறு வயதிலேயே தந்தையை இழந்து விடுகிறார் சிரஞ்சீவி. இவரது அப்பா கொலை செய்யப்பட்டார் என்பது சஸ்பென்ஸ் . இதை கடைசியில் சொல்வார்கள். அம்மா மறுமணம் செய்து கொள்கிறார். தன்னுடைய இரண்டாவது கணவனை அப்பாவாக ஏற்றுக்கொள் என்று அம்மா சொன்னதை சிரஞ்சீவியால் ஏற்க முடியவில்லை. விரக்தி,வெறுப்பு,!இதனால் பணத்துக்காக ரவுடியாக மாறுகிறார்.பின்னர் ராஷ்மிகாவுடன் காதல். வில்லன் சம்பத் ராஜின் கையாளாக மாறி அவரையே போட்டுத்தள்ளுவது முறைப்படி கடைசியில் நடக்கிறது.
இன்னும் எத்தனை காலத்துக்கு இந்த மாதிரி கதைகளை சொரிந்து கொண்டு பார்ப்பதோ? கடவுள் ரொம்பவும் சோதனையை கொடுக்கிறான் ஸார்வாள் !
துருவாவுக்கு நல்ல பாடி. ! அந்த காலத்து மல்யுத்த வீரர் தாராசிங் பாடி மாதிரி இருக்கிறது. கன்னடத்து கேஜிஎப் யாஷ்க்கு போட்டியாக இவர்தான் இருப்பார் போல.! பைட் ,டான்ஸ் என்று மனிதர் பின்னுகிறார். இவரது தாய் மாமா அர்ஜூனுக்கு பாடியுடன் நடிப்பாற்றல் இருந்தது. நல்ல நல்ல கதைகளில் கிடைத்தது.
இந்த செம திமிரு படத்தில் துருவாவுக்கு காதல் செய்ய வாய்ப்பு இல்லை. சண்டை போட ,டான்ஸ் ஆட பயன்படுத்தியிருக்கிறார்கள்.
நாயகி ராஷ்மிகாவுக்கு அவ்வளவாக வாய்ப்பு இல்லை. இதனால் உடல் அழகை காட்டுகிறார். கன்னட ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள்.
ஒளிப்பதிவுதான் படத்தின் மொத்த பலமே! எஸ்.டி .விஜய்மில்டனின் கேமராவில் சண்டை காட்சிகளும் ,டான்ஸ் காட்சிகளும் சரணாகதி அடைந்திருக்கிறது.துருவாவின் பாடிக்காக உலக அளவில் இருக்கிற பாடி பில்டர்களை இறக்கி இருக்கிறார்கள்.
சும்மா சொல்லக்கூடாது ,பைட் சீன்களில் தியேட்டரே விழித்துக்கொள்கிறது.
சரி படம் எப்படி என்கிறீர்களா?
சாரி பிரதர்ஸ்.!