நடிகரும், மக்கள்நீதி மய்யக் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று காலை சென்னை போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து பேசியுள்ளார்.
இந்த சந்திப்பு மொத்தம் 45 நிமிடங்கள் நடந்துள்ளது. இச்சந்திப்பின் போது, ரஜினியின் உடல்நலம் குறித்து கமலும்,கமலின் காலில் நடந்த அறுவைச்சிகிச்சை குறித்து ரஜினியும் ஒருவரையொருவர் நலம் விசாரித்ததோடு முக்கிய தமிழக அரசியல் குறித்தும் பேசப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ஐதராபாத்தில் சிகிச்சைபெற்று சென்னை திரும்பிய நடிகர் ரஜினியை சந்திப்பேன் என தேர்தல் பிரசாரத்தின் போது கமல்ஹாசன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.மேலும் சட்டமன்ற தேர்தலில் நண்பர் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்பேன் என்று கமல் கூறிவந்த நிலையில் தற்போது இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.