அமலாபாலின் ஆடை படத்தைப் பார்த்துவிட்டு பல பேர் எப்படி இப்படியெல்லாம் நடிக்கிறார் என கேட்டார்கள். டைரக்டர் விஜய்யுடன் டைவர்ஸ் வாங்கிய பிறகு எதற்கும் துணிந்து விட்டார்கள் போலும் என காரணமும் சொன்னார்கள்.
ஆடை படத்தில் ஆடை இல்லாமல் நடித்ததற்காக கண்டனங்களும் பாராட்டும் கலவையாக வந்தன.
அதனுடைய நீட்சியாக அந்தாலஜி வரிசையில் ‘ பிட்டா காதலு ‘ என்கிற தெலுங்கு வெப் சீரிஸ் வெளியாகி இருக்கிறது..
பி.வி.நந்தினி ரெட்டி என்கிற பெண் இயக்குனர் இயக்கியிருக்கிற இந்தப்படத்தில் அமலாபால் ,ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
மீரா என்கிற எழுத்தாளராக அமலாபாலும் இவரது கிழட்டு கணவனாக ஜெகபதி பாபுவும் நடித்திருக்கிறார்கள்.
கணவனுக்கு சந்தேகம். தன்னைவிட இளைஞனானவனுடன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பதாக நினைக்கிறார். அதன் விளைவாக படுக்கை அறை காட்சிகள் செக்ஸ் படத்தில் பார்க்கிற உணர்வை ஏற்படுத்துகிறது.
செக்ஸ் உணர்வுகளை பல நிலைகளில் அமலா பிரதிபலிக்கிறார். ஆபாசமான அசைவுகள் ,முகச்சுழிப்புகள் என கேமரா பதிவு செய்திருக்கிறது.
ஒரு நடிகையின் வீழ்ச்சியாக பார்ப்பதா ,அல்லது மறுமலர்ச்சியாக நினைப்பதா?
நாடு முன்னேறுகிறது!