கருணாஸ் நடிகர் சங்கத்தில்துணைத் தலைவர் பதவி பொறுப்பு வகித்து வரும்கருணாஸ் ,தற்போது நடிகர் சங்க கிரிக்கெட் போட்டி நடத்துவதற்கான முன் ஏற்பாடுகளில் மிகவும் பிஸியாகவுள்ளார்.சினிமா மட்டுமின்றி, முக்குலத்தோர் புலிப்படை அமைப்புத் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார் கருணாஸ்.
இந்நிலையில்,
இன்று அவர் சென்னை போயஸ் தோட்டத்திலுள்ள முதல்வர் இல்லத்தில் ஜெயலலிதாவைச் சந்தித்தார். அப்போது, ‘வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக’ அவர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கருணாஸ், ‘சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்வார். மற்றபடி, 234 தொகுதிகளிலும் அதிமுகவிற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வேன்’ என அவர் தெரிவித்தார்.
கடந்த தேர்தலில் நடிகர் வடிவேலு தி முகவிற்கு ஆதரவாகவும் ,விஜயகாந்துக்கு எதிராகவும் களமிறங்கினார் , ஆனால்,கடந்த முறை வடிவேலு ஆதரவு தந்த கட்சி தோற்றதால் , தமிழ்த் திரையுலகிலிருந்தே ஓரம் கட்டப்பட்ட நிலைக்கு ஆளானார் என்பது அனைவருக்கு ம் தெரிந்தது தான்.
தற்போது தான் கருணாஸ் நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், இந்நிலையில் கருனாஸ் ஏன் இந்த முடிவை எடுத்தார் என கோலிவுட்டே ஆச்சரியத்திலும்,அதிர்ச்சியிலும் ஆழ்ந்துள்ளது.