தமிழ்நாடு சூப்பர்ஸ்டார் ரஜினியின் நெருங்கிய நண்பர்களில் மோகன்பாபுவும் ஒருவர்.ரஜினியை அரசியலுக்கு போகாதே என்று சொன்னவர் .அவரை “டா” போட்டு பேசுகிறவர். தெலுங்கில் இவர் சூப்பர் நடிகர் ,படங்களை தயாரிக்கவும் செய்வார்.
தற்போது ‘சன் ஆப் இந்தியா ‘என்கிற படத்தை தயாரித்து வருகிறார்.
அந்த படத்துக்கு முக்கியமான பாடல் ஒன்று அவசியமாகிறது.
ராமரை புகழ்ந்து பாடிய வேதாந்த ரகுவீரரின் ராகத்தில் இருக்க வேண்டும் என்பது மோகன்பாபுவின் சவால்.!
வித்தியாசமான ,ஆனால் கடுமையான வரிகளில் அந்த பாடல் அமைந்திருக்கும் .அதற்குத்தான் ராஜா மெட்டமைக்க வேண்டும் என்று விவாதித்தார்.இவருடன் படத்தின் இயக்குநர் டைமண்ட் ரத்னபாபுவும் வந்திருந்தார்.
“சரி ,நான் மெட்டமைக்கிறேன் ,நீங்கள் பாடுகிறீர்களா?”என்று ராஜா கேட்டார்.
நான் பாடவில்லை என்பதாக சொல்லிவிட்டார் மோகன்பாபு.
தற்போதுதான் இந்த விவரங்களை விஷ்ணு மஞ்சு வெளியிட்டிருக்கிறார் .
To produce a movie with legends is a God sent opportunity for me. And to make a iconic prose into a song, only a legend could do it. I wanted to share this video with you.And brining the song visually is another story altogether; that I will share soon. #sonofindia @themohanbabu pic.twitter.com/Yo0USui7Ys
— Vishnu Manchu (@iVishnuManchu) February 20, 2021