மக்கள் செல்வன் விஜயசேதுபதி,கிஷோர் ,பவானி ஸ்ரீ ,சூரி ,மற்றும் பலர் நடித்துவரும் படத்தை இயக்கிவருகிறார் வெற்றி மாறன். ஒரு சிறுகதையை மையமாக வைத்து திரைப்படம் உருவாக்கி வருகிறது.
இசைஞானி இளையராஜா பாடல்களை பதிவு செய்து கொடுத்து விட்டார் .பின்னணி இசை சேர்ப்பு மட்டும்தான் பாக்கி,
தற்போது என்ன சிக்கல் என்றால் தொழிலாளர்கள் வேலைக்கு திரும்புவதற்கு தயக்கம் காட்டுகிறார்கள் என்பதுதான்.!
வீரப்பனின் மறைந்த சாம்ராஜ்யமாக விளங்கிய சத்திய மங்கலம் காடுகளில்தான் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்தது. தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டாக வேண்டும்.
ஆனால் தொழிலாளர்கள் தயங்குகிறார்கள். காரணம் என்ன?
காட்டுப்பகுதியில் டேரா அடித்து தங்கவேண்டும் .ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஏழெட்டு கிலோ மீட்டர் வரை நடைராஜா தான்.! படப்பிடிப்புக்கான உப காரணங்களை சுமக்க வேண்டும். டீ ,காப்பி க்கு சிரமம். உணவுக்கும் அதே நிலை. வனப்பகுதி என்பதால் இஷ்டத்துக்கு அடுப்பு பற்ற வைக்க முடியாது. இயற்கை உபாதைகளுக்கும் சிரமம்.
இதனால் தொழிலாளர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
எவ்வளவு கஷ்டப்பட்டு என்ன பிரயோசனம்? வழக்கமான பேட்டாவை விட அதிகமாக கொடுத்திருந்தால் உற்சாகமுடன் வேலை பார்த்திருப்பார்கள்.
வெற்றிமாறன் சார்! கொஞ்சம் கருணை காட்டுங்க. கைக்காசு கருணைக்கிழங்கா என்ன ,கணக்கு பார்க்கிறீங்க?