பிரபல பாலிவுட் நடிகையான கரீனா கபூருக்கு தற்போது 40 வயதாகிறது. கடந்த 2012ம் ஆண்டு நடிகர் சைஃப் அலி கான் கரீனா கபூரை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொண்டார். இந்த நட்சத்திர தம்பதியினருக்கு கடந்த 2016ம் ஆண்டு தைமூர் அலி கான் எனும் ஆண் குழந்தை பிறந்த நிலையில், தற்போது இரண்டாவதாகவும் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தங்களின் குடும்பத்தில் புதிதாக ஒரு உறுப்பினர் வரப் போகிறார் என கரீனா அறிவித்திருந்தார். இந்நிலையில், நேற்று இரவு பிரசவ வலி ஏற்பட்ட கரீனாவை மும்பை பிரிட்ஜ் கேண்டி மருத்துவமனையில் சைஃப் அலி கான் கொண்டு சேர்த்தார்.
இந்நிலையில், இன்று காலை 8:30 மணியளவில் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.சைஃப் அலி கான் ஏற்கனவே கடந்த 1991ம் ஆண்டு அம்ரிதா சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார்என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தம்பதிக்கு பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வரும் சாரா அலி கான்என்ற மகளும் , இப்ரஹிம் என்கிற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது