பாபநாசம்-2 (திரிஷ்யம் 2-ஆம் பாகம்)-ல் நடிக்கும் திட்டம் இல்லை என கமல்ஹாசன் தரப்பு தெளிவாக கூறிவிட்ட நிலையில், திரிஷ்யம் படத்தின் 2-ஆம் பாகம் தெலுங்கில் உருவாகவுள்ளது என்றும்,. அப்படத்துக்கான பணிகள் தொடங்கிவிட்டது என்றும் இயக்குநர் ஜீத்து ஜோசப் ஒரு புகைப்படத்துடன் தனது முகநூலில் பதிவு செய்துள்ளார்.திரிஷ்யம் முதல் பாகத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஸ்ரீப்ரியா இயக்கத்தில் வெங்கடேஷ், மீனா, நதியா உள்பட பலர் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது . இந்நிலையில் அதன் இரண்டாம் பாகத்திலும் கதாநாயகனாக வெங்கடேஷ் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தொடங்குவதாக ஜீத்து ஜோசப் குறிப்பிட்டுள்ளார்.மீனா நதியா உள்பட முதல் பாகத்தில் நடித்த பலரும் 2-ம் பாகத்திலும் நடிக்க உள்ளனர்.