தமிழக முதல்வரிடம் இருந்து கலைமாமணி விருதை பெற்ற நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் கலைமாமணி விருதை மறைந்த தந்தையின் புகைப்படத்தின் முன்பு தனது அம்மாவின் கழுத்தில் அணிவித்து,விருதையும் அவரது கையில் கொடுத்து காலில் விழுந்து ஆசி பெரும் புகைப்படங்களை பதிவிட்டு நெகழ்ச்சியுடன் கூறியுள்ளதாவது,”சாமானியனையும் சாதனையாளனாய் மாற்றும் தமிழக மக்களுக்கும், இந்த விருதளித்து ஊக்கப்படுத்திய தமிழக அரசிற்கும் மிக்க நன்றி. தந்தையை இழந்து நிற்கதியாய் நின்ற எங்களை இழுத்து பிடித்து கரைசேர்த்த என் தாய்க்கு இந்த கலைமாமணி சமர்ப்பணம்’ என்று பதிவிட்டுள்ளார்.