மெட்டி ஒலி என்ற டி .வி. தொடர் மூலம் நடிகராக கால் பதித்தவர் போஸ் வெங்கட். இத் தொடருக்கு கிடைத்த வரவேற்பால் பட வாய்ப்புகளும் குவிந்தன.பாரதிராஜவின் ஈரநிலம் படத்தில் வில்லனாக அறிமுகமாகி தொடர்ந்து வில்லன்மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வைத்த இவர் 2003 ல் நடிகை சோனியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு, தேஜாசுவின் என்ற ஒரு மகனும் மற்றும் பவதாரணி என்ற ஒரு மகளும் உள்ளனர். போஸ் வெங்கட் திமுக தலைவர் கருணாநிதியின் கதை, வசனத்தில் வெளிவந்த “கண்ணம்மா” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.திமுக குடும்பத்தில் இருந்து வந்துள்ள வெங்கட் திமுக தலைவர் கருணாநிதியின் கதை, வசனத்தில் வெளிவந்த “கண்ணம்மா” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில்,திமுகவில் நட்சத்திர பேச்சாளராக உள்ள நடிகர் போஸ்வெங்கட் தமிழக சட்டசபைத்தேர்தலில் அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு வாங்கினார்.
இது குறித்து போஸ்வெங்கட் கூறுகையில்,”திமுகவிற்காகவே அர்ப்பணிப்பான தன்னுடைய குடும்பத்தின் சார்பில் போட்டியிட சீட் கேட்டுள்ளதாகவும், கட்சிக்காக பாடுபடுவதே தன்னுடைய முதல் கொள்கை என்றும்,திமுக கட்சியும், கருணாநிதியும் தன்னுடைய ரத்தத்தில் கலந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.