Hello Naan Pei Pesuren’
CAST:Vaibhav, Aishwarya Rajesh, Oviya, VTV Ganesh, Karunakaran, Yogi Babu
DIRECTION:S Baskar
GENRE:Comedy
RATING;3/5.

குல்பி ஐஸ் சில் மயக்கமருந்து கொடுத்து அவர்கள் மயங்கிய பின்பு வீடு புகுந்து திருடும் பலே திருடன் வைபவ், இளகிய மனம் படைத்த ஐஸ்வர்யா ராஜேஷ் பிறருக்கு உதவும் மனம் படைத்தவர். இந்நிலையில் எதேச்சையாக வரும் ஐஸ்வர்யா ராஜேசின் தொலைபேசி அழைப்பின் மூலம் வைபவுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் காதல் மலர்கிறது.இவர்களின் காதலுக்கு ஓ.கே சொல்ல, சாவு வீட்டு ஆட்டம் போடும் ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் வி.டி.வி. கணேஷ் வைபவையும் சாவுக் குத்து ஆட்டம் போட்டு காட்டச்சொல்ல, போட்டியில், டப்பா குத்து, டம்ளர் குத்து, டிபன் பாக்ஸ் குத்து என சகல ஆட்டத்தையும் ஆடி, மிக எளிதாக வென்று காதல் கை கூடும் நேரத்தில், சாலையில் நடக்கும் ஒரு விபத்தில் ஓவியா அநியாயமாக ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து சாக, சிதறி விழுந்த ஓவியாவின் செல்போனை நைசாக லவட்டி.அதன் மூலமே ஓவியா பேயிடம் மாட்டிக்கொள்கிறார் வைபவ், அவரோடு, வி.டி.வி. கணேஷ், அவரின் சகோதரர் சிங்கப்பூர் தீபன், ஐஸ்வர்யா ராஜேஷ் என கூட்டாக அனைவரும் மாட்டிக்கொள்கிறார்கள். இவர்கள் அனைவரும் பேயிடம் இருந்து பேயிடம் இருந்து தப்பித்தார்களா இல்லையா என்பதே மீதிக்கதை. அநியாயத்திற்கு லாஜி க் இடித்தாலும் படம் தொடக்கம் முதல் இறுதி வரை கலகலவென போவதால் எல்லாத் தரப்பினரையும் கவர்ந்து விடுகிறது.