இரண்டு சங்கத்தலைவர்களும் உறுதியாக இருக்கிறார்கள். தயாரிப்பாளர்கள்தான் இறங்கிவரவேண்டும்.தியேட்டர்களை விட்டால் அவர்களுக்கு வேறு வழி இல்லை என்பதில் அழுத்தமான நம்பிக்கை அவர்களுக்கு.!
திருப்பூர் சுப்பிரமணியம், பன்னீர்செல்வம் இவர்களை போல நடப்பு தயாரிப்பாளர் சங்கமும் தங்களின் நிலையில் அதாவது “வி.பி.எஃப் கட்டணம் கட்ட முடியாது ,30 நாட்களுக்கு பிறகே ஓடிடி தளத்துக்கு கொடுப்போம் என்று கடிதமும் மாட்டோம் “என்பதில் உறுதியாக இருக்கிறது. உஷா ராஜேந்தர் தலைமையில் உள்ள தயாரிப்பாளர் சங்கமும் ,முரளி ராமசாமி தலைமையில் இயங்கிவரும் தாயாரிப்பாளர் சங்கமும் உறுதியாக இருக்கிறது.
இந்த சங்கங்களில் அரசு ஆதரவு முரளி ராமசாமி தலைமையிலான சங்கத்துக்கு மட்டுமே இருக்கிறது.
படங்களை ஓடிடி தளத்தில் வெளியிடுவது தொடர்பாகத் தொடர்ச்சியாக பல கருத்துகள் இரு தரப்பிலும் பகிரப்பட்டு வருகின்றன. 30 நாட்களுக்குப் பிறகே ஓடிடி தளத்தில் வெளியிடுவோம் என்கிற கடிதம் கொடுத்தால் மட்டுமே, திரையரங்குகள் ஒதுக்குவோம் என்கிற முடிவுக்கு,தயாரிப்பாளர்கள் இணங்குவதாக இல்லை.
இரண்டு தரப்பிலும் நடந்த பேச்சு வார்த்தையும் தோல்வியில்தான் முடிந்திருக்கிறது.
திரையரங்க உரிமையாளர்கள் தங்களுடைய முடிவைக் கலந்து ஆலோசித்து அடுத்தகட்டப் பேச்சுவார்த்தையில் தெரிவிப்பதாக சொல்லியிருக்கிறார்கள்.
அடுத்த கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வி என்றால் ஸ்டிரைக் தவிர வேறு வழி இல்லை.
தமிழகத்தில் பல அரசு நிறுவனங்கள் ஸ்டிரைக் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் இப்படியொரு நிலையில் வெயிட்டிங்.!
என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.