‘ஏலே ‘ஐஸ் விற்பவர் முத்துக்குட்டி என்கிற முதியவர் சமுத்திரக்கனி.
அந்த கிராமத்தில் ஐஸ் பெட்டியை சைக்கிளில் வைத்து ஊர் சுற்றி வருகிற மொடாக்குடியர் .மிரட்டி கடன் வாங்குகிறவர் .டோன்ட் கேர் மாஸ்டர். எவனாயிருந்தால் எனக்கென்ன என்கிற ஒரு வித திமிருடன் கவலையில்லாத மனிதன்.
சரி ,இதற்கெல்லாம் பிளாஷ்பேக்கில் இயக்குநர் ஹலிதா ஷமீம் காரணம் சொல்வார் என்று நினைக்க முடியாத அளவுக்கு சமுத்திரக்கனியை சாகடித்து விடுகிறார். இறுதிக்கடன் செலுத்துவதற்காக பட்டணத்திலிருந்து மகன் பார்த்தி வருகிறார்..
வில்லங்கமும் வேட்டி கட்டாமல் வந்து நிக்கிது.” உங்கப்பன் முத்துக்குட்டி லட்சக்கணக்கில் கடன் வாங்கியிருக்கான்.பைசல் பண்ணாமல் பொணத்தை தூக்கவிடமாட்டேன்” என்று கடன் பத்திரத்துடன் ஒருவன் வந்து நிக்கிறான்.ஊர் பெரிசுகள் ஒரு வழியா அந்த கடன்காரனை சமாளிக்கிறார்கள். முதற்பாதி எதோ கிராமத்தைப்பத்தின டாக்குமெண்டரி மாதிரி போகுது.
ஆனால் இந்த பெண் டைரக்டர் ஹலிதா இருக்காரே…பக்கா கிரிமினல்.!எப்படியெல்லாம் டிவிஸ்ட் வைத்து பிற்பாதியில் கமர்ஷியலா படத்தை தூக்கி நிறுத்துறார் தெரியுமா?
சூப்பரு அக்கா.!
பல பிரச்னைகளை முதல் பாதியில் கொண்டு வந்து பொணத்தை காணாமல் போகச் செய்த இயக்குநர் அதற்கான விளக்கவுரையை செகண்ட் காப்பில் சுவையாக சொல்கிறார். சில பூச்சுற்றல்.ஆனாலும் பிச்சிப்பூவாக மணக்கிது .
கனியை இந்த மாதிரியான கதாபாத்திரத்தில் பார்ப்பது அரிது. இவர்தான் பத்துப்பொருத்தமும் சரியாக இருக்கிற ஆள்னு செலக்ட் செய்த ‘கேஸ்டிங் டைரக்டர்ஸ்’க்கு வாழ்த்துகள் மக்கா!! கதையில் வர்ற சில கேரக்டர்களுக்கு வெறுப்பாகிற அந்த முத்துக்குட்டி படம் பார்க்கிற பொதுமக்களுக்கு ஜாலி குட்டி.! தியேட்டர்ஸுக்கு வரவேண்டிய படத்தை ஓடிடிக்கு வித்த தயாரிப்பாளர் சசிகாந்த் மீது எரிச்சல் வருது.
சமுத்திரக்கனியின் மகனான மணிகண்டன் அப்பனுடன் அப்படியே ஒட்டிப்போகிறது. நடிப்பிலும் நிறைவாகவே இருக்கிறார்.
அறிமுக நாயகி மதுமதி.தப்பான செலக்சன் இல்லை. அழகான கிராமத்துப் பெண்! இயல்பாக இருக்குது.
கபீர் வாசுகியின் பாடல்கள் ஒட்டல .இத மாதிரி இன்னொரு சமுத்திரக்கனியை சொருகி கதையின் ஓட்டத்தை பள்ளம் வெட்டி தடுத்து விடுகிறார்கள்.
பார்த்தியின் காதலுக்கு அற்ப காரணம்தான் குறுக்கே விழுகிறது என்பது கோணல் !அதற்கான விடையும் சொல்லல.
என்னமோடா குருசாமி குருமாவில் கறித்துண்டு காணாமப்போச்சு.!!!