தமிழக சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து அ.தி.மு.க. மற்றும் பா.ம.க. இடையே சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இன்று பேச்சுவார்த்தை நடந்தது.
இப் பேச்சு வார்த்தையின் முடிவில், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.விற்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும், எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.