தேர்தல் தேதி அறிவிச்சாச்சு .கூட்டணி அமைக்கிறதில் திராவிடக் கட்சிகளின் தலைமைகள் மும்முரமாக இறங்கியிருக்கின்றன
அதிமுக தலைமையை தன்னுடைய சாதி வாக்குகளைக்காட்டி அச்சுறுத்தியே போதுமான சீட்டுகளை பா.ம.க .வாங்கிவிட்டது. இதன் கோரிக்கையான இட ஒதுக்கீடு பிரச்னையை பற்றி அதிமுக சற்றும் கவலைப்படவில்லை. அதனால் என்ன அதிமுகவை பணிய வைப்பதற்கான ஆயுதம்தான் பாமகவின் சாதி வாரியான இட ஒதுக்கீடு போராட்டம்!
30சீட்டு கேட்டு டிமாண்ட் வைத்தார்கள். கடந்த தேர்தலில் ஒரு சீட்டு கூட வெற்றி பெறவில்லை. ஆனால் இந்த ஆண்டு எத்தனை இடங்களில் செயித்தாலும் அது லாபம்தான். எந்த கட்சிக்கு வேட்டு வைப்பார்களா தெரியவில்லை. ஏகப்பட் ட பிளவுகள் வன்னியர்களுக்குள் !
அதைத்தாண்டித்தான் வெற்றியை பிடிக்கவேண்டும்.
பாரதிய ஜனதாவுக்கு 15 சீட்டுகள் ஒதுக்கப்படலாம் என்று அதிமுக வட்டாரங்கள் சொல்கின்றன.
ஆனால் முருகன் 40 வரை கேட்கிறாராம் !
பாமகவுக்காவது வன்னியர் ஓட்டுகள் இருக்கிறது ,பிஜேபிக்கு எந்த சமூகத்தின் ஓட்டுகள் இருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினியை நம்பியிருந்தார்கள் .அவர் பட்டையாய் குழைத்து திருப்பதி நாமத்தைப் போட்டுவிட்டார்.மன்றத்துப்பிள்ளைகளும் பல கட்சிகளுக்கு சென்று விட்டார்கள்.
ஆனாலும் அர்ஜுனமூர்த்திக்கு ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில்தான் இடம் கொடுத்திருக்கிறார் ரஜினி.
அ .மூவன்னா கட்சியின் வளர்ச்சிக்கு ஆதரவும் தெரிவித்திருக்கிறார்.ரஜினி.!இந்த கட்டுச்சோற்றுக்குள் இருப்பது எலியா,அல்லது பெருச்சாளியா என்பது தேர்தல் நெருக்கத்தில் தெரிந்து விடும்.
சசிகலாவின் அறிக்கை அதிமுகவினரை பலவீனப்படுத்தும் வகையில் இருக்கிறது என்பது உண்மைதான். ஆனாலும் அந்த அறிக்கைக்கு பின்னே சூத்திரக்கயிறு யாரிடம் இருக்கிறது?
இவர் அதிமுக பொதுச்செயலாளர் என்கிற முறையில் ஆதரவாளர்களை நிறுத்துவாரா? வாய்ப்பு இருக்கிறதா? அதிமுகவில் சீட்டுக்கிடைக்காதவர்கள் சசியிடம் வந்து சேருகிற வாய்ப்பு இருக்கிறதா இல்லையா? ஏனெனில் சசி தன்னைத்தானே அதிகாரப்பூர்வமான அதிமுகவின் பொதுச்செயலாளர் என்பதாக சொல்கிறார்.
ஐஏஎன் எஸ்.சி நிறுவன கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?
வெஸ்ட் பெங்காலில் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தனித்த மெஜாரிட்டி பெறும்.154 இடங்களை கைப்பற்றக்கூடும் .மொத்த இடங்கள் 294.
பிஜேபி முன்னைவிட அதிக இடங்களை பெறுகிற வாய்ப்பு இருக்கிறது.அதிக சதவீத வாக்குகள் கிடைக்கும் என்கிறது கருத்து கணிப்பு.! இது மம்தாவுக்கு சவால்தான்தான்!
தமிழ்நாட்டில் திமுகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்குமாம்.158 இடங்களை கைப்பற்றுவார்களாம்.
அதிமுக-பாஜக கூட்டணி 62 இடங்களை பிடிப்பார்கள். இந்த தேர்தலில் 15 சதவீத வாக்குகளை அதிமுக இழக்கும் என்கிற எச்சரிக்கையையும் விட்டிருக்கிறார்கள்.
பாண்டிச்சேரியில் இந்த முறை பிஜேபி -போட்டி காங்கிரஸ்-அதிமுக கூட்டணி 19 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என்கிறார்கள் கருத்துக்கணிப்பார்கள்.
பார்க்கலாம் எந்த அளவுக்கு இந்த கணிப்புகள் உண்மையாகின்றன என்பதை?
இ வி எம் மிஷின்கள்தான் துணை!