தமிழகத்தில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தின் முக்கிய கட்சிகளாக அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களது கூட்டணி பேச்சுவார்த்தையை தற்போது தீவிரப்படுத்தியுள்ளனர். திமுகவை பொருத்தவரை தன்னுடைய கூட்டணி கட்சிகளான காங்கிரஸ்,மதிமுக, கம்யூ,கட்சிகள்,விடுதலைசிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அதிமுகவை பொறுத்தவரை பாமகவுக்கு 23 இடங்கள் என நேற்று மாலை ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது.அது போல ஏற்கனவே அதிமுக, பாஜகவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் 22 இடங்கள் என பேசி முடிவு செய்யப்பட்டு விட்டதுஎன்றும் , இதுகுறித்து இன்று தமிழக பாஜகவினரால் அமித்ஷாவிடம் தெரிவிக்கப்பட்டு அதுவும் இறுதி செய்யப்பட்டு விடும் என்கிறார்கள்.
இந்நிலையில் அதிமுக அமைச்சர்கள் தங்கமணி வேலுமணி துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி ஆகியோர் நேற்று இரவு தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது தேமுதிகவிற்கு 14 இடங்கள் வழங்க வாய்ப்பு உள்ளதாக அதிமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது தேமுதிகவினர் தங்களுக்கு 20 சீட் வேண்டும் என கேட்டும் அதிமுக தரப்பில் பிடி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
தேமுதிகவிற்கு அதிமுக ஏற்கனவே முடிவு செய்த வகையில் 14 என்கிற எண்ணிக்கையிலான இடங்கள் இன்று முடிவாகிவிடும் என்கிறார்கள். மேலும் ஜி கே வாசனி ன் தமிழ் மாநில காங்கிரசுக்கு 2 சீட்டுகளும், கிருஷ்ணசாமியின் புதிய தமிழகத்திற்கு இரண்டு இடங்களும், ஏ சி சண்முகத்தின் புதிய நீதி கட்சிக்கு ஒரு இடமும், ஜான் பாண்டியனுக்கு ஒரு இடமும் ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளதாக அவர்களிடம் திட்டவட்டமாக கூறிவிட்டதாக தெரிகிறது. இதில், புதிய தமிழகத்தை தவிர மற்றவர்கள் அனைவரும் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும்,பாஜக கூட்டணி அறிவிப்பு இன்று முடிந்தவுடன் மற்ற கட்சிகளுக்கான அறிவிப்புகள் இன்று மாலையே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது