இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், தனது மகன் விஜய் பெயரில் அரசியல் கட்சி தொடங்கிய விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே மோதல் உருவானது தனக்கும் தனது தந்தை தொடங்கிய கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை,தனது ரசிகர் யாரும் அகக்கட்சியில் இணைய வேண்டாம் மீறினால் நீக்கப்படுவீர்கள் என்றும்,தனது தந்தை தொடங்கிய கட்சி குறித்து சட்ட நடவடிக்கை எடுப்பேன் என அறிவித்தும் தனது ரசிகர்களுக்கு எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டார் விஜய்.
இதன் மூலம் தந்தை -மகன் மோதல் விவகாரம் வெளிப்படையாக மீடியாக்களிலும் வெளியானது. அதே சமயம், மீண்டும் எஸ்.ஏ. சந்திரசேகர் தனது ஆதரவாளர்களுடன் நடத்திய கூட்டத்தில்,புதிய கட்சி ஒன்றை தொடங்க உள்ளதாகவும் இதற்கு விஜயும் ஒப்புதல் அளித்துவிட்டதாகவும் தனக்கு மோதிரம் ஒன்றை விஜய் பரிசளித்து உள்ளதாகவும், இருவரும் சமரசமாகி விட்டதாகவும் எஸ்.ஏ. சந்திரசேகர் குறிப்பிட்டதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் விஜய் தரப்பில், ‘தந்தை – மகன் இடையே பேச்சுவார்த்தை கூட கிடையாது . விஜய் நீண்ட நாட்களாக தனது தந்தையின் போன் அழைப்புக்களை கூட ஏற்பதில்லை.அவரது நம்பரை முடக்கிவைத்துள்ளார் விஜய் என்றும், தனது முடிவுகளில் தந்தை தலையிடுவதை விஜய் விரும்பவில்லை என்பதே இதற்கு காரணம் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், எஸ்.ஏ.சி, விஜய்க்கு மன்னிப்பு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. என் மகன் என்னிடம் பேச வேண்டும் என்பதையே நான் எப்போதும் விரும்புகிறேன் என்றும் அதில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது