எந்த புத்துல என்ன பாம்பு இருக்குமோ தெரியல. அது நாகப்பாம்பா ,கட்டுவிரியனா ,கொம்பேறி மூக்கனா ,என்ன எழவா இருந்தா என்ன ?
கடிச்சா விஷம்தானே.!
அது மாதிரி ஆகிப்போச்சு அதிமுக நிலைமை.!
ராஜபாளையம் தொகுதியை பாஜக கேட்கிது .கமல்ஹாசனின் முன்னாள் நண்பி கவுதமியை அங்க வேட்பாளராக நிறுத்துகிற ஐடியா.
ஆனா ரொம்ப நாளா மஞ்ச சட்டைப்போட்டு மாரியாத்தா கோவிலுக்கு கூழு ஊத்துற ரேஞ்சுக்கு மந்திரி ராஜேந்திர பாலாஜி அந்த தொகுதியிலதான் நிக்கப்போறார்னு சொல்றாங்க.ஆனா கட்சி சிவகாசியில் நில்லுங்கிது.
ராஜேந்திர பாலாஜியை பகைச்சுக்க முடியாது.கட்சி அந்தரங்க வேலைகள் எல்லாம் தெரிஞ்சவர்.
பிஜேபியையும் பகைச்சுக்க முடியாது.அதனால மந்திரிகளை வேற தொகுதிகளை பத்தியும் கன்சிடர் பண்ணுங்கன்னு சொல்லிருக்கிறதா நண்பர்கள் சொல்றாங்க.
பிஜேபியின் மத்திய குழு திருவல்லிக்கேணியில் குஷ்பு ,ராஜபாளையத்தில் கவுதமின்னு முடிவு பண்ணியிருப்பதாக சொல்றாங்க.கவுதமி ராஜபாளையத்தில் வீடு எடுத்து தங்கி ஓட்டு கேட்டுப் போறாங்களாம் .
இதனால அதிமுக தலைமைக்கு புத்துக்குள்ள கைய விட்ட நிலைமை.!
பத்தாக்குறைக்கு விஜயகாந்த் பார்ட்டி. வேட்பு மனு தாக்கல் பண்ணின ஆட்களே கம்மி..இதில 20 சீட்டு கொடுங்கன்னு கேட்கிறாங்களாம்.
ஆனா பிஜேபியில பத்து கொடுக்கிறதுக்கே ரொம்ப யோசிக்கிறாங்களாம்.!