இந்தியாவின் ஒப்பற்ற மனிதர்களில் ஒருவர் அமிதாப் பச்சன். சிறந்த நடிகர். உண்மையான சூப்பர் ஸ்டார் இந்திய அளவில்.!
என்ன ஆயிற்றோ தெரியவில்லை.! அவரது ரசிகர்கள் மிகுந்த கவலையில்!
இன்று திடீரென அவரது எண்ணங்களை வடிக்கிற எழுத்துத்தளமான ‘பிளாக்’கிலிருந்து வெளியேறுகிறார்.டிவிட்டரில் இருந்தும் விடை பெறுகிறார்.
“என்னுடைய நன்றிகளையும் அன்பினையும் வாழ்த்துகள் கூறிய அன்பர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் “என்று மட்டுமே கூறியிருக்கிறார்.
அதற்கான காரணம் என்ன?
78 வயதான அமிதாப் அவர்கள் எதையும் மறைக்காமல் அதையும் சொல்லிவிட்டார்.
“மெடிக்கல் கண்டிஷன் ..மருத்துவர் அறிவுரை …ஆபரேஷன் .எழுத இயலவில்லை!” என்பதாக சொல்கிறார்.
குணம் அடைந்து மீண்டு வருக.!
அண்மையில் அவர் மே டே படத்துக்காக அஜய் தேவ்கன் இயக்கத்தில் நடித்து முடித்திருந்தார்.