” மோடி ,ஆர்.எஸ்.எஸ் .சினால் தமிழ்க்கலாச்சாரம் அழிந்து விடக்கூடாது .எச்சரிக்கையாக இருங்கள் ” என்று காங்கிர தலைவர் ராகுல் காந்தி தமிழக மக்களுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.
கன்னியாகுமரியில் தன்னுடைய தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய ராகுல் காந்தி மறைந்த முன்னாள் நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் வசந்த குமார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு பின்னர் பிரசாரத்தை தொடங்கினார்.
“இந்தியன் என்கிற கடமையுடன் சொல்கிறேன்.தமிழ் கலாச்சாரம் ,தமிழ் மொழி பாதுகாக்கப்படவேண்டும் .
நரேந்திர மோடியும் ,ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் தமிழ் கலாச்சாரம் ,அதன் பண்பாடு ஆகியவைகளை இழிவு படுத்துகிறது.
நமது வரலாறு தமிழ்நாட்டை தமிழர்களைத் தவிர மாற்றார்களை ஆள அனுமதித்ததில்லை. இந்த தேர்தலில் அதை மீண்டும் நிரூபித்தாக வேண்டும்.தமிழர்களின் உண்மையான பிரதிநிதி மட்டுமே இந்த மண்ணை ஆளவேண்டும்.முதல்வராக வரவேண்டும் ” என்று வலியுறுத்தினார்.
( படம்: டைம்ஸ் ஆப் இந்தியா.,அவுட் லுக் இந்தியா.)