கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில், தனுஷ் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளபுதிய படம், ‘கர்ணன்’ .இப்படத்தில் ரஜிஷா விஜயன், கௌரி கிஷன், லால், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இந் நிலையில் இப் படத்தில் இடம்பெற்ற ‘கண்டா வரச்சொல்லுங்க.. கர்ணனை கையோட கூட்டி வாருங்க’ என்ற பாடல், சமீபத்தில் சிங்கிள் பாடலாக வெளியாகி மிகப் பெரிய ஹிட்டடித்தது. இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் இன்று மாலை வெளியாகும் என ஏற்கனவே கலைப்புலி எஸ் தாணு அறிவித்து இருந்த நிலையில், ‘ஏன் ஆளு பண்டாரத்தி,எடுப்பான செம்பருத்தி, கண்ணால என்னைப்பத்தி கலங்கடிச்ச சக்களத்தி….‘ என தொடங்கும் இப்பாடல் வெளியாகியுள்ளது.யுகபாரதி வரிகளில் தேனிசைத்தென்றல் தேவாவின் ‘கணீர்’ குரலில் .இப்பாடல் படமாக்கப்பட்ட காட்சிகளோடு தற்போது வெளியாகி இணையதள ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாக பரவி வருகிறது.
Happy to present Paadal 2 of #Karnan#PandarathiPuranamhttps://t.co/bRqrxVXuWz @dhanushkraja @Music_Santhosh @mari_selvaraj @KarnanTheMovie @thinkmusicindia @ZeeTamil #KarnanArrivesOnApril9
— Kalaippuli S Thanu (@theVcreations) March 2, 2021