தென்னகத்தில் பிப்ரவரி மாதம் வெளியான படங்களில் தெலுங்கு தேசம் மட்டுமே தலை நிமிர்ந்து நிற்கிறது.
தமிழ்நாடு,கேரளம் இரண்டும் படு பாதாளத்தில் விழுந்து விபத்துகளை சந்தித்திருப்பது மகா சோகம்.!
கன்னடம் பரவாயில்லை.!ஆறுதலாக துருவ் நடித்திருந்த படம் போகரு போயிருக்கிறது.
மலையாளத்தில் சாஜன் பேக்கரி ,தமிழில் சக்ரா இரண்டும் என்னமோ ஏதோ என்கிற ரேஞ்சில்.!
தெலுங்கில் 30 படங்கள் வெளியானதில் உப்பேன்னா ஸ்டடி.மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்களில் 200 ரூபா டிக்கெட்டில் கூட்டம் குறையாமல் நிறைவாகவே போயிருக்கிறது.
ஜோம்பி ,விநியோகஸ்தர்களுக்கு லாபம். 8 ஆண்டுகளுக்கு பிறகு ‘நாந்தி ‘ படம் தயாரிப்பாளர் அல்லரி நரேஷ் லாபத்தை பார்த்திருக்கிறார்.
கபடதாரி ,சக்ரா ,பக் மூன்றும் பிளாப்.
கன்னடத்தில் 19 படங்கள் வெளியானதில் துருவ சார்ஜாவின் படத்துக்கு மட்டும் கூட்டம் வந்தது.
தமிழ்நாட்டுக்கு கடந்த பிப்ரவரி மாதம் மகா சோகம்.
விஷாலின் சக்ராவின் நெட் கலெக்சன் 16 லட்சம்
கமலி பிரம் நடுக்காவேரி ஓடிடியில் 68 லட்சம் கலெக்சன். வெற்றி மாறன் ,மணிமாறன் கூட்டணி பலனில்லை.
இவைதான் கடந்த பிப்ரவரியில் தென்னக சினிமாவின் நிலை!