தமிழ்நாட்டில் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது.
முக்கிய எதிர்க்கட்சியான திமுகழகத்தில் நேர்காணல் தொடங்கிவிட்டது. போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களையும் பெறத் தொடங்கி விட்டார்கள். மற்ற கட்சிகளிலும் பணிகளை தொடங்கி விட்டார்கள்.
ஆளும் கட்சிகளான அதிமுக,பாஜக ஆகிய கட்சிகளிடையே உடன்பாடு ஏற்பட்டுவிடும் என்கிற நம்பிக்கையில் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. மத்தியில் தனித்த பெரும்பான்மை என்கிற பலமுடன் ஆளுகிற பாஜக அதிக அளவில் இடங்களை கேட்பதால் இழுபறியாக இருக்கிறது.
இந்த நிலையில் திமுகவில் போட்டியிடுகின்ற வாய்ப்பு கேட்டு நடிகர் போஸ் வெங்கட் விருப்பமனு கொடுத்திருக்கிறார்.
நடிகர் விமல் மனைவி பிரிதர்ஷினி திமுக சார்பில் மணப்பாறை தொகுதியில் போட்டியிட விருப்ப மனு. கொடுத்திருக்கிறார்.