அரசியல்வாதிகளிலும் ‘காமலோலர்கள்’ இருப்பார்கள் போலிருக்கிறது.
விடுதலை பெற்று இத்தனை ஆண்டுகள் ஆகியும் மக்களுக்கு இன்னமும் தேர்ந்த அறிவு வரவில்லை போலும்.!
என்னமோ இப்பத்தான் தெரிந்தவர் மாதிரி சொல்கிறாயா என கேட்கலாம். நமக்கு ஊழல் பேர்வழிகளை தேர்வு செய்துதானே பழக்கம்.பக்கத்து மாநிலம் கர்நாடகத்தில் காமாந்தக்காரர்களும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்களே!
கர்நாடக நீர் வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜெர்கிகோலிதான் தற்போது காம லீலை சி.டி யில் மாட்டிக்கொண்டு ராஜினாமா செய்திருப்பவர்.
வேலை வாங்கித்தருவதாக சொல்லி ஒரு பெண்ணை வன்புணர்வு செய்திருக்கிறார்.. இதை வெளியில் சொன்னால் ஒழித்துக்கட்டிவிடுவேன் என்பதாக பயமுறுத்தியிருக்கிறார்.தற்போது விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
பொதுவாக ஆளும்கட்சியினர் என்றால் தப்பித்துக்கொள்வது என்பது இந்தியாவில் ஆச்சரியமில்லையே!