“வெற்றியின் அடையாளம் துணிச்சல்”என்பார் புரட்சிக்கவிஞர் பாரதியார்.
அரசியல்வாதிகளுக்கு அடிப்படை பாடமே இதுதான், ஆணவமல்ல.!
கணிசமான இடங்களைப் பெற்று கடந்த காலத்தில் எதிர்க்கட்சித் தலைமையைப் பெற்று இருந்த தேமுதிக இன்று சில சீட்டுக்களுக்காக கெஞ்சி கூத்தாடுவதை பார்க்கிறபோது “எத்தகைய அவமானம்” என நினைக்கத்தோன்றுகிறது.
“மதிப்புடன் வாழ்ந்த மனிதனுக்கு நேரும் அவமானம் மரணத்தை விட கொடியது”என்கிறார் பாரதியார். இது ஒரு கட்சிக்கும் பொருந்துவதுதான்.
ஆனால் அத்தகைய அவமானங்களை சந்திக்காமல் ஆண்மையுடன் களம் காண்பது என்கிற திறமையுடன் இறங்கியிருக்கிறது சமத்துவமக்கள் கட்சி.
இன்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 6 ஆவது மாநிலப் பொதுக்குழுகே கூட்டம் தூத்துக்குடியில் நடந்தது.
கட்சியின் நிறுவனத் தலைவரும், பொதுச்செயலாளருமான சரத்குமார் தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச்செயலாளர் என்.சுந்தர் முன்னிலை வகித்தார். தலைமை நிலைய செயலாளர் எம்.பாகீரதி வரவேற்றார்.மாநில முதன்மை துணைப் பொதுச்செயலாளர் ராதிகா சரத்குமார், மாநில பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன், கொள்கை பரப்பு செயலாளர் என்.எம்.எஸ்.விவேகானந்தன், அரசியல் ஆலோசகர்கள் ஆர்.ஜெயப்பிரகாஷ், டி.டி.என்.லாரன்ஸ், துணைப் பொதுச்செயலாளர்கள் எம்.ஏ.சேவியர், ஜி.ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசியிருக்கிறார்கள்.
இந்த மாநில பொதுக்குழுவில் ராதிகா சரத்குமார் பேசியது முக்கியமானதாகும்.
பண பலம் வாய்ந்த பாரதிய ஜனதாவில் இவரது காலத்திய நடிகைகள் குஷ்பு ,கவுதமி ஆகியோருடன் கருத்து செறிவுடன் வாதிட ,கேள்விகளை முன் வைத்திட சரியான ,தகுதியான பெண் ராதிகா சரத்குமார் மட்டுமே! சத்தியமாக இவர் குழாயடி சண்டைப் பேச்சாளர் அல்லர்.
இவர் முழு நேர அரசியலில் ஈடுபடுவது பெண்ணியத்துக்கும் அறம் சார்ந்த அரசியலுக்கும் நல்லது.
மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி சேர்ந்துள்ள இந்த கட்சி கூட்டணி தர்மத்துடன் தன்னுடைய பொதுக்குழுவில் நடந்து கொண்டிருப்பது வரவேற்புக்குரியது.ஆரோக்கிய அரசியலுக்கு வழி காட்டுதலாக இருக்கிறது.
அதற்கு அந்த கட்சியின் தலைவர் சரத்குமாரின் பேச்சு நல்லுதாரணம் ஆகும்.!
” இந்தக் கூட்டணி சிறப்பாக அமையும். கமல்ஹாசன் எண்ணத்தையும் அறிந்து, எங்கே நாம் பின்வாங்க வேண்டுமோ, அங்கு பின்வாங்கிக் கொள்வோம். மற்ற இடத்தில் வியூகத்தை அமைத்து வெற்றி பெறுவோம்.” என்றிருக்கிறார்.
” கோவில்பட்டி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டியிட்டால் வெற்றி நிச்சயம். நான் ஆலங்குளம், தென்காசியில் நிற்கலாம். எங்கே நின்றாலும் உழைப்பு முக்கியம். உழைப்பும் உறுதியும் இருக்கும் போது வெற்றி பெறுவோம் என்றார் அவர்.
கூட்டத்தில் கட்சியின் நிறுவனத் தலைவர் மற்றும் பொதுச்செயலாளராக ரா.சரத்குமார் மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதுபோல முதன்மை பொதுச்செயலாளராக ராதிகா சரத்குமார், பொருளாளராக ஏ.என்.சுந்தரேசன் மற்றும் துணைப் பொதுச்செயலாளர்கள், மண்டல செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு கூட்ட மேடையில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
” தூத்துக்குடி விமான நிலையத்துக்கு காமராஜர் பெயர் சூட்ட வேண்டும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும். தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
அதிமுக கூட் டணியில் சரத்குமார் அங்கம் வகித்திருந்த காலத்தில் நிகழ்ந்தவைகளையும் கூறி தற்சமயம் என்ன நடந்தது என்பதையும் பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார்.
” இம்முறை எங்களுக்கு உரிய அங்கீகாரம் வேண்டும். ஒன்றிரண்டு இடங்களை கொடுத்தால் நிச்சயமாக நிற்கமாட்டோம். அதுபோல தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என உறுதிபட தெரிவித்துவிட்டோம். அதற்கு பிறகும் நமக்கு முறையான அழைப்பு வரவில்லையெனால் அவர்கள் நம்மை மதிக்கவில்லை என்று அர்த்தம். நம்மை கறிவேப்பிலை போல பயன்படுத்தி கொள்கிறார்கள். அந்த நிலை மாற வேண்டும்.