தளபதி விஜய் படம் என்றாலே ஹீரோயினை தயாரிப்பாளரோ ,இயக்குநரோ முடிவு செய்து விட முடியாது.
ஒரு யோசனை சொல்லலாம். இவரை போட்டால் நல்லாயிருக்கும் .கேரக்டருக்கு பொருத்தமா இருப்பார் என்கிற விளக்கத்தை விஜய்யிடம் சொல்ல வேண்டும்.அவர் பரிசீலனை செய்து ஓகே சொன்னாலும் சொல்லுவார் ,அல்லது வேறுயாரையாவது சிபாரிசு செய்வார். இதுதான் காலம் காலமாக நடந்து வருகிறது.
தற்போது சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிற தளபதி 65 -க்கு கதாநாயகி யார் என்கிற பிரச்னை முடிவுக்கு வந்து விட்டதாக சொல்கிறார்கள்.
நெல்சன் இயக்கம் இந்த படத்தில் யோகிபாபுதான் மெயின் காமெடியன். அனிருத் இசை.கேமரா மனோஜ் பரமஹம்சா.
சரி ,நாயகி யார்?
பூஜா ஹெக்டேவா, ராஷ்மிகா மந்தனாவா?
60 நாளில் மொத்த ஷூட்டிங்கையும் முடித்து விட்டு இந்த வருடத்துக்குள் படத்தை வெளியிட வேண்டும் என்பது திட்டம்.
ஆனால் இதுவரை யார் என்பது முடிவு செய்யாமல் இருந்து வந்த நாயகி பிரச்னையை முடித்து விட்டார்களாம்.
ரஷ்யாவில் தளபதி விஜய்யுடன் ஆடப்போகிறவர் பூஜா ஹெக்டே என சொல்கிறார்கள்.
பெரிய சம்பளமாம் .மூணரை கோடி என்ரும்ஜ் சொல்கிறார்கள். வருமானவரி அதிகாரிகள் கவனிக்க.!
ஏப்ரலில் நடக்கவிருக்கிற இந்த கதையில் தளபதி விஜய்க்கு அரசியல்வாதி கேரக்டர் என்கிறார்கள்.
எந்த மாதிரியான கெட் அப் ?
மத்திய அரசா,மாநில அரசா?
இதெல்லாம் நெல்சனைக் கேட்டால்தான் தெரியும்.