இந்திய பிரதமர் மோடி அருகில் கால் மீது கால் போட்டபடி பேசிய தில் ராணிதான் நடிகை பிரியங்கா சோப்ரா.
கவர்ச்சியை அள்ளி வீசுவதில் அவருக்கு நிகர் அவரே.!அமெரிக்கரை கல்யாணம் செய்து கொண்டதால் அந்த நாட்டு கலாச்சாரத்துடன் ஒன்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கலாம்.
அவர் அந்நிய நாட்டு காதலரை கரம் பற்றிய பிறகு வட இந்தியாவில் பட வாய்ப்புகளும் அவ்வளவாக இல்லை.
இதனால் அவர் தற்போது நியூ யார்க்கில் சோனா என்கிற பெயரில் ரெஸ்ட்டாரண்ட் திறந்திருக்கிறார். கணவனுடன் இணைந்து திறக்கிற படத்தை வெளியிட்டிருக்கிறார். மந்திரங்கள் சொல்லி மணி ஆட்டி பூஜை நடத்தியிருக்கிறார்கள்.
இந்திய உணவு வகைகள் இந்த ரெஸ்ட்டாரன்டில் கிடைக்கும் .