“என்னை தண்ணீர்ப்பாம்பாக நினைத்து விடாதீர்கள். நான் நாகப்பாம்பு. ஒரே கடியில் உங்கள் உயிர்போய் விடும் “என்று படத்தின் வசனத்தை பேசி பிஜேபியில் இணைந்திருக்கிறார் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி .
தமிழ்நாடு ஊட்டியில் மிகப்பெரிய ஆடம்பர ஹோட்டல் கட்டியிருக்கும் இவர் முன்னதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்தார்.
அந்த கட்சியை விட்டு விலகி இன்று பிரதமர் மோடியின் முன்னிலையில் பிஜேபியில் இணைந்தபோதுதான் அவரது பட வசனத்தை பேசியிருக்கிறார்.
தேசிய விருது பெற்றுள்ள இந்த நடிகர் வயது மூப்பு காரணமாக பாலிவுட் படங்களில் தற்போது நடிப்பதில்லை..
இவர் பேசிய வசனம் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு எச்சரிக்கையாக கருதப்படுகிறது.
ஆனாலும் நச்சுப்பாம்பு யாரைக்கடித்தாலும் விஷம் ஏறத்தான் செய்யும்.!