கடந்த 2012ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் விமல், சிவா, அஞ்சலி, ஓவியா நடித்த ‘கலகலப்பு’ திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. முழுநீள நகைச்சுவைப் படமான இதன் இரண்டாம் பாகத்தை சுந்தர் சி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.அரண்மனை படத்தின் இரண்டாம் பாகத்தை போலவே ‘கலகலப்பு’ 2ஆம் பாகத்திலும் ஹீரோ, ஹீரோயின்களை மாற்றஇயக்குனர் முடிவு செய்திருப்பதாகவும் இதையடுத்து இப் படத்தில் ஆர்யா, நயன்தாரா மீண்டும் இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே இருவரும் இணைந்து நடித்த நகைச்சுவை விருந்தான ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ மற்றும் ராஜா ராணி ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் ஆகியது . இந்த மேஜிக் மீண்டும் திரும்புமா என்பது படம் வெளியான பின்பு தான் தெரிய வரும்.