விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ் நடிப்பில், வெங்கட கிருஷ்ண ரோக்நாத் இயக்கத்தில் உருவான ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற படத்தின் டீசர் கடந்த மார்ச் 4-ஆம் தேதி வெளியானது .
இது விஜய் சேதுபதி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோக்நாத் எனக்கு தெரியாமலேயே இந்த டீசர் வெளிவந்து விட்டது என்றும் இதுகுறித்து தயாரிப்பாளரிடம் விளக்கம் கேட்டு உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:”மன்னிக்கவும்
இந்த முறை டீசர் வெளிவருவது சம்மந்தமான போஸ்டரையோ வெளிவந்த டீசரையோ நான் எனது முக நூல் பக்கத்தில் வெளியிடவில்லை. அதற்கு மிக முக்கியமான காரணம் நான் இயக்கிய படமான யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்துக்கான டீசர் வெளி வருகிறது என்று எனக்கு தெரியாது.
கூடவே மிக முக்கியமான தகவல் அந்த டீசருக்கும் எனக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை. நான் அந்த டீசர் வெளியாகி 45 நிமிடங்கள் கழித்தே பார்த்தேன்.திரும்பவும் மன்னிக்கவும் நான் வேறு வழியில்லாமல் அந்த டீசரை பற்றி பேசாமல் மௌனமாக கடந்து போகிறேன். உண்மையில் இந்த படத்தின் ஆன்மாவை உள்ளங்கையில் காட்ட கூடிய நான் கட் பண்ணிய டீசர் என்னிடம் இருக்கிறது.
டப்பிங் செய்யப்படாமல் ‘ஆர்.ஆர்.’ செய்யப்படாமல்’டி.ஐ.’ செய்யப்படாமல் அப்படியே ‘ரா’வாக இருக்கிறது. தயாரிப்பு தரப்போடு இந்த குளறுபடிக்கு அடிப்படை காரணம் பற்றி கேட்டிருக்கிறேன். தக்க பதில் வந்தால் என் முக நூல் நண்பர்களுக்கு அறிவிக்கிறேன்”.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.