பொதுவாக தேர்தல் காலங்களில் ஒரு கட்சியினர் மீது பிற கட்சியினர் புகார்கள் கூறுவது எல்லா கட்சியினருக்கும் பொருந்தும் .
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பொது மக்களிடம் சாதாரணமாக பழகி பேசி கவருவதை பார்த்த பிஜேபியினர் அவரது பிரசாரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனிடம் புகார் கூறினார்கள் .
அதைப்போல மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் மீது திமுகவினர் ஒரு புகார் கூறி இருக்கிறார்கள். தற்போது தனது பிரசாரத்தில் திமுக ,அதிமுக ,இரண்டு கட்சியினர்களையும் கமல் ஒரு பிடி பிடித்து வருகிறார்.
“கருணாநிதியை அவமானப்படுத்த வேண்டும் என்றால் ஸ்டாலின் என்று கூறினாலே போதும் ” என மக்கள் நீதி மய்ய கூட்டத்தில் பேசியிருந்தார்.
“இது தனி மனித தாக்குதல். தேர்தல் நடத்தை விதிகளை கமல் மீறி வருகிறார் “என்பதாக புகார் கூறி இருக்கிறார்கள்.
போகப்போக இன்னும் என்னென்ன கூத்துகள் நடக்கப்போகிறது தெரியவில்லை. போகிற போக்கினைப்பார்த்தால் கொரானாவின் வீரியத்தைப்பார்த்து தேர்தல் பிரசாரக்கூட்டங்களுக்கு அரசாங்கம் தடை விதித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
என்னமோடா முருகா ,எல்லாமே உனது திருவிளையாடல். மலையில் அமர்ந்தபடியே திருவிளையாடலை நடத்துகிறாய்.நடத்து !
( படம்; இந்து.)