குறிப்பிட்ட ஒரு இனம் சார்ந்த கதை. என்றாலும் இது சுய சரிதம் மாதிரி.! அவர்களுக்குள்ளேயே நடக்கிற பகை ,வெறி ,பழி வாங்குகிற குணம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது. மதுரையை சுற்றிலும் வாழ்கிற மக்களின் மண்வாசனை.வெகு இயல்பாக இருக்கிறது.
கணேசாபுரம் என்கிற ஊரை சேர்ந்த சின்னா,ராஜ் பிரியன் ,காசிமாயன் ஆகிய களவாணிகளைப் பற்றிய கதை. “எட்டூருக்கும் நா தாண்டா தலைவன்”ன்னு வீராப்பு பேசுறமாதிரி களவாணிகளுக்கும் ஒரு தலைவர் .அவருக்கு கட்டுப்பட்டு நடக்கிறார்கள் களவாணிகள்.இதில் வருகிற சிக்கலை சொல்கிறார்கள். 90 களில் இப்படி இருந்ததாம்.
காதல் ,பகை ,நட்பு இவைகளை கலந்தடித்து கொடுத்திருக்கிறார்கள்.
சின்னாவுக்கு இதுதான் முதல் படம் என்பதை நம்பமுடியவில்லை. தொழில் சுத்தம். சில காட்சிகளில் மட்டும் ஆளு புதுசு என்பது தெரிகிறது.
களவாணியாக நடித்திருக்கிற ரிஷா ஹரிதாஸ் பரவாயில்லை.
காசி மாயன்,ராஜசிம்மன் ,பசுபதிராஜ் ,பெரேரா ஆகியோர் சரியான தேர்வு.
ராசா சாயின் இசை ,பி.வாசுவின் ஒளிப்பதிவு கதைக்கு தகுந்த தேவையை கொடுத்திருக்கிறது.
பிற சமூகத்தினரை நோகடிக்காமல் ஒரு சமூகத்தை மைய்யமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிற படம் பிற இயக்குநர்களுக்கு ஒரு பாடம் .வீராங்கன் பாராட்டுக்குரியவர்.