பூம் பூம் மாடு என்று சொன்னால் யாராவது வம்பு ,வழக்கு போட்டு விடுவார்களோ ,என்கிற பயத்துடன் காளை என டைட்டிலை நிறுத்தியிருக்கிறார்கள்.
ஆர்.டி .குஷால் குமார் இயக்கம். முன்னாள் கவர்ச்சி நடிகை அனுராதாவின் மகன் கெவின் கதாநாயகன் ,சாரா தேவா கதாநாயகி.
கல்யாணமான பிறகு பேசிப்பழகி ,மனம் ஒன்றியபிறகு உடல் கலக்கலாம் என்பதை தேனிலவுக்கு போன இடத்தில் கதாநாயகி சொல்ல அதனால் கதாநாயகன் பெரும்பாலும் மைண்ட் வாய்ஸிலேயே பேசி விடுகிறார்.
இவர்கள் எப்படி உடல் கலந்து தேன் குடித்தார்கள் என்பதுதான் கதை.!
மகனை கதாநாயகனாக பார்க்கவேண்டும் என்கிற அம்மா அனுராதாவின் ஆசையை நிறைவேற்றி விட்ட மகிழ்ச்சி இயக்குநருக்கு இருக்கலாம். அனுராதாவுக்கும் இருக்கலாம். நடித்துவிட்டோம் என்கிற பெருமை கெவினுக்கும் இருக்கலாம்.
சாராவுக்கு கொடுத்த வேடத்தில் நிறைவாக நடித்திருக்கிறோம் என்கிற நிறைவு கதாநாயகிக்கு வந்திருக்கலாம்.
இப்படி நடித்தவர்கள் அனைவருமே சொல்லிக்கொள்ளலாம்.
ஆர்.சுந்தரராஜன் கெஸ்ட் ரோலில் வருவது மாதிரி வந்து நாயகனுக்கு அட்வைஸ் பண்ணுகிறார் .இதன் பிறகுதான் நாயகன் நாயகி உடல் சேருகிறார்கள். நல்ல கேரக்டர்.!
அப்புக்குட்டிக்கு காமடி ரோல்.
ஒளிப்பதிவு கே.பி .பாலமுருகன் .அனுராதாவின் மகள் அபிநயஸ்ரீக்கும் காவல் துறை அதிகாரி கேரக்டர்.
பூம் பூம் காளையின் குணம் என்ன ? தலையாட்டுவதுதான்!