நாடு ஒரு பக்கம் தேர்தல் ஜுரத்தில் !
ஜக்கி வாசுதேவ் மறுபக்கம் ஆலய பாதுகாப்பு வேகத்தில்.!
இடையில் சிவராத்திரி வரவே இடைச்செருகலாக இரவினில் ஆட்டம்.!
ஆண்களும் பெண்களும் சினிமா மெட்டுகளில் பாட்டுகளைப்பாடி ஆடி களைத்தார்கள் . இதற்கு முன்னர் எந்த சைவ மடமும்,சிவனடியார்களும் ஜக்கி வாசுதேவ் மாதிரி கூத்தடிக்கவில்லை. ஜக்கி ஆடிய கூத்துக்கு எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்த ஆட்டத்தில் பெரும்பாலும் கோடீஸ்வரர்களும் சினிமா நடிகைகளும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
பக்தி எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்பது தெரியவில்லை.
ஈஷா யோகா மையத்தில் நடிகைகள் சமந்தா, ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.. நடிகை ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சமந்தா தனது தோழிகளுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது.
நடிகை சமந்தா முக கவசம் அணிந்து ரொம்பவே பாதுகாப்பாக விழாவில் கலந்து கொண்ட புகைப்படமும் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இதையெல்லாம் விட சமந்தாவின் வீடியோ ஒன்று இப்போ சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது..
அந்த வீடியோவில் நடிகை சமந்தாவை செல்லமாக சத்குரு ஜக்கி வாசுதேவ் ‘கிள்ளுவது’ போல உள்ளது. அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் சமந்தாவை சத்குரு கிள்ளி விளையாடுகிறார் என கலாய்க்க தொடங்கினர். ஆனால், தெலுங்கு திரையுலகின் பின்னணி பாடகி மாங்க்ளியின் பாடலுக்கு நடனமாட சொல்லியே சமந்தாவை புஷ் செய்துள்ளார் ஜக்கி என்றும் ரசிகர்கள் விளக்கம் கொடுத்து வருகின்றனர்.