போகிற போக்கினைப் பார்த்தால் லாக்டவுன் மீண்டும் வரலாம் என்கிற அச்சம் ஏற்படுகிறது.
சில இடங்களில் கொரானா தொற்று அதிகமாகி வருவதாக சொல்கிறார்கள். தியேட்டர்களிலும் கூட்டம் இல்லை. புதிய படங்களுக்கு மக்கள் ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்த்ததில் ஏமாற்றமே மிச்சம்.மால் தியேட்டர்களை மறுபடியும் மூடி விடுவார்கள் என்கிற பயம் தொழிலாளர்கள் மத்தியில் இருக்கிறது. ஒரு காட்சிக்கு 15 பேர் கூட வரவில்லை என்றால் தியேட்டர்காரர்கள் என்ன செய்வார்கள்?
இது தொடர்பாக எந்த சங்கமும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. தியேட்டர்களுக்கு மக்கள் வராததின் காரணம் டிக்கெட் கட்டண உயர்வா,அல்லது பாப்கார்ன் ,வாட்டர்பாட்டிலின் அக்கிரம விலையா ,பார்க்கிங் கட்டணத்தின் அராஜக உயர்வா என்பது பற்றி அவ்வப்போது அறிக்கைகள் விடுவதுடன் சரி ,உருப்படியான காரியம் எதுவும் நடக்கவில்லை. ஆட்சி ,அதிகாரத்தில் இருப்பவர்களை திருப்திபடுத்தினால் மட்டும் போதும் என்கிற நிலைமைதான் இருக்கிறது..
ஏப்ரலில் சுல்தான்,கர்ணன் ஆகிய படங்கள் வெளியானால் தியேட்டர்களின் நிலைமை சீரடையும் என நம்புகிறார்கள்.