அப்பாடா ,கோவிட் 19 -ன் பிடியில் இருந்து சுத்தமா விடுபட்டாச்சு. இனி நம்ம வேலையை ஆரம்பிச்சிடவேண்டியதுதான்னு சூர்யா கிளம்பிவிட்டார்.
பாண்டிராஜின் படத்தின் ஷூட்டிங் இன்றுதான் ஆரம்பம். சன் பிக்சர்ஸ் தயாரிக்கிற படம். கிராமிய மணம் கமகமக்க கதையை தயார் பண்ணியிருக்கிறார் பாண்டிராஜ்.
சூர்யாவின் ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். மேலும் சத்யராஜ் ,சரண்யா பொன்வண்ணன் ,இளவரசு ,ஆகியோருக்கு முக்கிய வேடங்கள் . இமான் இசை.ரத்னவேலு கேமரா.
கிருஸ்துமஸ் வெளியீடாக வரவிருக்கிற இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.