2021 -கிராம்மி அவார்ட் நிகழ்ச்சியை மறக்கவியலாமல் செய்திருக்கிறார் லில்லி சிங் .
கனடாவின் காமடி நடிகை.யூ டியூப் பிரபலம்.
“பிரதமர் மோடிக்கு எதிராக இந்திய விவசாயிகள் மாதக்கணக்கில் நடந்த முற்றுகை போராட்டத்தை மறக்க முடியாது. அந்த அளவுக்கு பரபரப்புடன் அந்த போராட்டம். அந்த போராட்டத்துக்கு ஆதரவாக இந்த நடிகை கிராம்மி அவார்டு நிகழ்ச்சிக்கு “நான் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கிறேன்” என்கிற ஆங்கில வாசகம் அடங்கிய முக கவசம் அணிந்து வந்திருந்தார்.
இந்திய மீடியாக்களில் பெரும்பகுதியினர் அந்த போராட்டத்தை இருட்டடிப்பு செய்த நிலையில் “உலக மீடியாக்களின் கவனத்தை திருப்புவதற்காக இப்படி செய்ததாக”லில்லி சொல்லியிருக்கிறார் .