நீண்ட இழுபறியில் இருந்த படம் பரமபதம். கிரைம் திரில்லர். திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் .
முதலில் இந்த படம் ஜனவரியில் ரிலீஸ் என்கிறார்கள் .பின்னர் பிப்ரவரி என்கிறார்கள் .இப்படியாக இழுத்துக்கொண்டே போனவர்கள் தற்போது தமிழ்ப்புத்தாண்டுக்கு வெளிவருவது நிச்சயம் என்கிறார்கள்.
அதுவும் ஓடிடியில் !
இந்த படத்தை 24 ஹவர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருக்கிறது.
நந்தா முக்கிய கேரக்டரில்.!
மற்றும் ரிச்சர்ட் ,ஏ எல் .அழகப்பன் ,வேல.ராமமூர்த்தி ஆகியோரும் கனமான ரோலில் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தை 24 ஹவர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் நந்தா, ரிச்சர்ட், ஏ.எல்.அழகப்பன், வேலராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திருஞானம் இயக்கியிருக்கிறார்.
திரிஷாவின் ரசிகர்களை இந்த முறையாவது ஏமாற்றாமல் இருந்தால் சரி.!