லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அருள் சரவணா அண்ணாச்சியின் கடை விளம்பரங்களில் அவரே நடித்து ஆடிப்பாடி அசத்துவார். இவரது விளம்பரப்படங்களை இயக்கியவர் ஜேடி ,ஜெர்ரி .
தற்போது இந்த இரட்டையரின் இயக்கத்தில் அருள் சரவணன் நடிக்கும் படத்தை இயக்கும் பொறுப்பினை ஏற்று குலுமணாலியில் போய் உட்கார்ந்திருக்கிறார்கள்.
நாயகியாக ஊர்வசி ரவுத்தேலா என்கிற பாலிவுட் நடிகையை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
இந்த படத்தில் நடிகர்கள் பிரபு, விவேக், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஹாரீஸ் ஜெயராஜ் இசை.
200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் சன் ,லைகா ,ஏஜிஎஸ் போன்ற நிறுவனங்கள்தான் அஜித்,விஜய் ,விஜயசேதுபதி ஆகிய பெரிய நடிகர்களை வைத்து படம் எடுப்பார்கள். ஆனால் அறிமுகமே இல்லாத அருள் சரவணன் மிகவும் துணிச்சலான ஆள்தான் என்பதை அவரது பட்ஜெட் எடுத்துக்காட்டுகிறது.
தமிழ்ச்சினிமாவில் இந்த சரவணன் மிகப் பெரிய பர பரப்பை ஏற்படுத்துவார் என்று நம்பலாம்.